பிரிட்டன்: தொழிற்கட்சியில் குழப்பம்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளி யேறியதை அடுத்து அந்நாட்டைச் சூழ்ந்திருக்கும் குழப்பநிலை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி யையும் விடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது என்ற பிரசாரத்தை தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் கையாண்ட விதம் திருப்திகரமானதாக அமை யவில்லை என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கொந்தளிக்கின் றனர். அக்கட்சியின் நிழல் அமைச்சரவையைச் சேர்ந்த பாதி பேர் பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக நிழல் சுகாதாரச் செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

பிரிட்டனின் கோரிக்கை களுக்குப் பதில்களைக் கொடுக் கும் திறன் கோர்பினுக்கு குறைந் துவிட்டதாக ஹெய்டி தெரிவித் துள்ளார். நிழல் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஹிலரி பென் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீறும் வகையில் தொழிற்கட்சித் தலைவர் கோர்பின் செயல்பட்டால் கட்சி உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இதன் விளைவாக அவரைக் கட்சியிலிருந்து கோர்பின் நீக்கி னார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடைமுறையின் போது, அரசாங்கத்திடம் கேள்வி களை எழுப்ப தொழிற்கட்சியில் வலுவான தலைமை வேண்டும் என பிபிசியிடன் பென் கூறியுள் ளார். இந்நிலையில், தொழிற்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலா னோரின் ஆதரவை கோர்பின் பெற்றிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை முடிவு செய்ய மறுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2.5 விழுக்காட் டுக்கும் அதிகமான பிரிட்டிஷ் மக்கள் மனு ஒன்றில் கையொப்பம் செய்துள்ளனர். அதன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 100,000க்கும் அதிகமான கை யொப்பங்களைக் கொண்ட மனுவைப் பற்றி விவாதிக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றம் பரிசீலனை செய்யவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!