பூச்சோங்கில் கையெறி குண்டு வீச்சு: 8 பேர் காயம்; பயங்கரவாதச் செயல் அல்ல

கோலாலம்பூர்: சிலாங்கூரில் பூச்சோங் போலிவார்ட் பேரங் காடியிலுள்ள இரவு கேளிக்கை விடுதியின் முன்புறம் கையெறி குண்டு வெடித்ததில் 8 பேர் காயம் அடைந்ததாக சிலாங்கூர் மாநில போலிஸ் படை துணை ஆணையர் அப்துல் ரஹிம் ஜபார் தெரிவித்தார். இதுவொரு கையெறி குண்டுத் தாக்குதல் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். நேற்று அதிகாலை 2.15 மணியளவில் அந்த கேளிக்கை விடுதியில் கூடியிருந்தவர்கள் ஸ்பெயினுக்கும் இத்தாலிக்கும் இடையே நடந்த காற்பந்துப் போட்டியை தொலைக்காட்சியில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு கையெறி குண்டு வெடித்ததாக அந்த அதிகாரி சொன்னார்.

அதிகாலை 3 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக பூச்சோங் தீயணைப்புத் துறை தெரிவித்தது. பூச்சோங்கில் நடந்த குண்டு வெடிப்பு பயங்கரவாதச் செயல் அல்ல என போலிசார் தெரிவித் துள்ளனர். அது தனிப்பட்ட விரோதம் அல்லது வியாபார விரோதம் காரணமாக இருக்கலாம். அதனைப் பற்றி போலிசார் ஆராய்ந்து வருவதாக துணை ஆணையர் அப்துல் ரஹிம் ஜபார் தெரிவித்தார். குண்டு வெடிப்புக்கு கையெறி குண்டுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இச்சம்பவம் கொலை முயற்சி என்ற அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களில் நால்வர் ஆண்கள் மற்ற நால்வர் பெண்கள் என்றும் போலிஸ் தகவல்கள் கூறின. இவர்கள் மருத்துவமனை களில் சிகிச்சைப் பெற்று வருவ தாகவும் போலிசார் கூறினர்.

கையெறி குண்டு வெடித்த இடத்திற்கு போலிஸ் அதிகாரி ஒருவர் மோப்ப நாயுடன் செல்கிறார். படம்: சின் சியூ டெய்லி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!