அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டம்; பலர் கைது

பேட்டன் ரூஜ்: அமெரிக்காவில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து போலி சாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங் கள் நடந்து வருகின்றன. அந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது பல நகரங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஆர்ப் பாட்டக்காரர்கள் ஈடுபட்ட வேளை யில் வேறு சில இடங்களில் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சான்பிரான்சிஸ்கோ, கலிஃ போர்னியா ஆகிய இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்களில் போராட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லுயிசியானா மாநிலத்தின் பேட்டன் ரூஜ் பகுதியில் போலி சாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையே மோதல் வலுத்ததாகக் கூறப்பட்டது.

மினசோட்டாவில் ஆர்ப்பாட்டக் காரர்கள், போத்தல்களையும் கற்களையும் போலிசார் மீது வீசினர். லுயிசியானா, பேட்டன் ரூஜ் பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. போலிசார் மீது ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களையும் போத்தல் களையும் வீசியதில் போலிஸ் அதிகாரிகள் சிலர் காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பலரை போலிசார் கைது செய்துள்ளனர். நியூயார்க் நகரில் பலர் மேன்ஹேட்டன் வரை ஊர்வல மாகச் சென்ற நேரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தகவல்கள் கூறின.

கூட்டத்தினர் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் ரப்பர் தோட்டாக் களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆர்ப் பாட்டக்காரர்கள் கூறினர். சில இடங்களில் போலி சாருக்கு எதிரான பேரணிகள் அமைதியாக நடந்ததாகக் கூறப் பட்டது. கடந்த வியாழக்கிழமை ஐந்து போலிஸ் அதிகாரிகள் கறுப் பினத்தைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட டாலஸ் நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் இருவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நகரங்களில் போராட்டங்கள் தொடரும் வேளையில் லுயிசியானா மாநிலத்தின் பேட்டன் ரூஜ் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!