திரேசா மே தலைமையில் புதிய அமைச்சரவை

லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திரேசா மே, தமது புதிய அமைச்சரவை உறுப்பினர் களின் பெயர்களை அறிவித்துள் ளார். ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் செய்த கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு புதிய அமைச் சரவையில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. லண்டன் முன்னாள் மேயரான 52 வயது போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப் பட்டு, அவருக்குப் பதிலாக புதிய நிதியமைச்சராக, ஏற்கெனவே வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

மைக்கேல் ஃபேலோன் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர் கிறார். லியம் ஃபாக்ஸ் அனைத் துலக வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு டேவிட் டேவிஸ், பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு நடத்துவதை மேற்பார்வையிடும் பொறுப்பை ஏற்கிறார். வெளியுறவுஅமைச்சராக நிய மிக்கப்பட்டிருக்கும் போரிஸ் ஜான்சன், ஐரோப்பாவுக்கும் உலகின் பிற நாடுகளுக்குமிடையே உள்ள உறவை மீண்டும் புதிய விதத்தில் வடிவமைக்க பிரிட் டனுக்கு இப்போது ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

திருவாட்டி திரேசா மே, பிரிட்டிஷ் எலிசபெத் அரசியாரை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு தனது கணவர் பிலிப்புடன் வந்தார். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களின் மத்தியில் உரையற்றிய திருவாட்டி மே, சிறந்த பிரிட்டனை உருவாக்கவிருப்பதாக உறுதி கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பேச்சை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அவர் கூறினார். புதிய அமைச்சரவை உறுப் பினர்களின் பெயர்களையும் அவர் அறிவித்தார். பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!