மகாதீருடன் சேர்ந்து புதிய கட்சித் தொடங்கும் முகைதீன்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமரான முகைதீன், முன்னாள் பிரதமர் மகாதீருடன் சேர்ந்து புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
புதிய கட்சிக்கான விண்ணப் பத்தைத் தாக்கல் செய்யப்போவ தாகவும் அவர் கூறினார்.
"முந்தைய நாள் இரவில் டாக்டர் மகாதீரின் வீட்டில் புதிய கட்சிக்கான ஆலோசனைக் கூட் டம் சுமூகமாக நடைபெற்றது. விரைவில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பேன்," என்று 'ஃபே-ஸ்புக்' பக்கத்தில் திரு முகைதீன் தெரிவித்திருந்தார்.
"விண்ணப்பத்தை பதிவகம் ஏற்க பிரார்த்தனை செய்வோம். இறைவன் விருப்பமிருந்தால் மக் களுக்கும் நாட்டுக்கும் சிறந்த சேவையாற்றுவோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
சந்திப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவேற்றியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் டாக்டர் மகாதீர் மகனும் கெடா மாநிலத் தின் முன்னைய முதல்வருமான முக்ரிஸ் மகாதீர், லங்காவி அம்னோவின் மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின் உட்பட ஏழு பேர் கலந்துகொண்டனர்.
புகைப்படத்தில் உள்ள நாங்கள் ஏழு பேரும் புதிய கட்சியை நிறுவிய உறுப்பினர் களாக இருப்போம் என்று திரு முகைதீன் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!