டிரம்ப்: அவதூறு புகார்களால் பாதிக்கப்பட்டவன் நான்

நியூயார்க்: குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் மீது பல பெண்கள் அடுக்கடுக்காக பாலியல் தொடர்பான புகார்கள் கூறி வரும் வேளையில் இத்தகைய அரசியல் அவதூறு புகார்களால் “பாதிக்கப்பட்டவன்” நான் என்று டிரம்ப் கூறியுள்ளார். பல பெண்கள் தன் மீது கூறும் அத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று கூறிய டிரம்ப், தேர்தல் நெருங்கும் வேளையில் தனது செல்வாக்கையும் தனக்கு கிடைக்கக்கூடிய ஆதரவையும் குறைக்கும் நோக்கத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகக் கூறினார். வடகரோலினாவில் சார்லட் நகரில் வெள்ளிக்கிழமை பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஐந்து அல்லது பத்து விழுக்காட்டினர் உண்மை என்று நம்பினால் தேர்தலில் நாம் வெற்றி பெறமுடியாது என்று கூறினார்.