தென்சீனக் கடல் விவகாரம்: மலேசியா, வியட்னாம் அதிருப்தி

கோலாலம்பூர்: தென்சீனக் கடலில் ராணுவத் தளம் ஒன்றைச் சீனா அமைத்து வருவதாக வெளி யாகியுள்ள தகவல் குறித்து மலேசியாவும் வியட்னாமும் கவலை தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து சீனாவின் தற்காப்பு அமைச் சருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்க இருப்பதாக மலேசியத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதீன் உசேன் கூறியுள்ளார். இதற்கிடையே, தென்சீனக் கடலில் உள்ள ஸ்பிராட்லி தீவு களை வியட்னாம் மீண்டும் சொந்தம் கொண்டாடி உள்ளது. தென்சீனக் கடலில் ராணுவத் தளம் ஒன்றைச் சீனா அமைத்து வருவது பற்றி வெளியான தகவல் குறித்து வியட்னாமின் வெளியுறவு அமைச்சு அக்கறை தெரிவித் துள்ளது.

தென்சீனக் கடல் தொடர்பாக இரண்டு விவகாரங்கள் கவலை அளிப்பதாக திரு ஹிஷாமுதீன் உசேன் குறிப்பிட்டார். தென்சீனக் கடலில் தவறுத லாக அல்லது வேண்டுமென்றே நடைபெறும் சம்பவங்களையும் அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டியதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது. தென்சீனக் கடலில் சீனா ராணுவத் தளம் அமைத்து வருவது உண்மையாக இருந்தால் அதற்கு எதிராக மலேசியா நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று திரு ஹிஷாமுதீன் எச்சரிக்கை விடுத்தார். தென்சீனக் கடலைச் சீனா சொந்தம் கொண்டாடுவது அனைத்துலகச் சட்டப்படி செல் லுமா செல்லாதா என்பதைக் கேட்டு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சருக்குக் கடிதம் எழுத இருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!