மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

1 mins read
db33b90d-775a-477b-8849-794026e1634d
-

கோலாலம்பூர்: மலேசியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள சிரமப்படும் வேளையில் நிவாரண முகாம்களில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தவிக்க நேர்ந்துள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு போதிய உணவு இருந்த போதிலும் சுகாதாரம் குறித்து கவலைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய நிலையில் சூறையாடல் சம்பவங்கள் நடக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்ல முடியவில்லை, கையில் இருக்கும் பணமும் செலவாகிக் கொண்டிருக்கிறது என்று முகாமில் தங்கியுள்ள ஒருவர் வருத்தத்துடன் கூறினார். கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 18,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை இதற்கு முன்பு 23,000 ஆக இருந்தது.