பயணத் தடைக்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேறிகளுக்கு விதித் துள்ள பயணத் தடைக்கு அமெரிக் காவிலும் மற்ற நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. திரு டிரம்ப்பின் பயணத் தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்கா வின் பல இடங்களில் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. அந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அமெரிக்க அதிபரின் உத் தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இருப்பினும் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு விதிக்கப் பட்டுள்ள பயணத் தடை குறித்து டிரம்ப் நிர்வாகம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை முஸ்லிம்களுக்கு விதிக்கப் பட்ட தடை அல்ல என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதிக பாதுகாப்பான கொள்கைகள் வகுக்கப்பட்ட பின்னர் அந்த 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர் களுக்கு மீண்டும் விசா வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள தற்காலிக பயணத் தடைக்கு எதிராக மிச்சிகனில் உள்ள விமான நிலையத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!