கிம் ஜோங் நாம் கொலை: இருவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தோனீசிய மற்றும் வியட்னா மியப் பெண்கள் இருவர் மீது நேற்று கொலைக் குற்றஞ்சாட்டப் பட்டது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கிம் ஜோங் நாம் கொலை செய் யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வியட்னாமைச் சேர்ந்த டோன் தி ஹுவோங் மற்றும் இந்தோனீசியாவைச் சேர்ந்த சிட்டி ஆய்ஷா ஆகிய இருவரும் நேற்று சிப்பாங் நீதி மன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டனர். இந்தப் படுகொலையில் வட கொரிய உளவுத்துறை சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுவதால் அனைத்துலக அளவில் இந்த வழக்கு கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று சிப்பாங் நீதிமன்றத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தி யாளர்கள் குவிந்தனர். பலருக்கு நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

குற்றம் சாட்டப் பட்டுள்ள வியட்னாமியப் பெண் டோன் தி ஹுவோங் கும் (இடது), இந்தோனீசியப் பெண் சிட்டி ஆய்ஷாவும். படங்கள்: ஏஎப்பி, ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!