முன்னாள் அதிபர் பார்க்கின் ஆதரவாளர்களுடன் போலிசார் மோதல்

சோல்: ஊழல் விவகாரம் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தியது ஆகிய குற்றச்சாட்டு களின் பேரில் அதிபர் பதவி யிலிருந்து நீக்கப்பட்ட திருவாட்டி பார்க் கியன் ஹையை கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கக் கோரி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு குறித்த நீதிமன்ற விசாரணை நேற்று தொடங் கியபோது திருவாட்டி பார்க் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் யாரிடமும் பேசவில்லை. முன்னதாக திருவாட்டி பார்க் நீதிமன்றத்திற்கு புறப்படுவதற்கு முன்பு அவரது வீட்டுக்கு வெளியில் ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்களுக்கும் போலி சாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தென்கொரிய முன்னாள் அதிபர் திருவாட்டி பார்க்கின் வீட்டுக்கு முன்பு ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்களுக்கும் போலிசாருக்கும இடையே மோதல் ஏற்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திருவாட்டி பார்க் தன் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!