சிரியா தற்கொலைத் தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை 112 ஆனது

ர‌ஷிடின்: சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மாண்டவர்களின் எண்ணிக்கை 112க்கு அதிகரித்துவிட்ட தாக சிரியாவின் மனித உரிமை கண் காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சிரிய அரசாங்கத் தகவலின் அடிப் படையில் அது அந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது. அலெப்போ நகரின் மேற்கே ர‌ஷிடின் என்னுமிடத்தில் நேற்று முன்தினம் அரசாங்கக் கட்டுப்பாட்டு நகர் களிலிருந்து வெளியேறிச் சென்றவர்களின் பேருந்துகளைக் குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வெடித்ததில் பயணப் பேருந்து களும் கார்களும் சிதறின. தூக்கி வீசப் பட்டவர்களில் குழந்தைகளின் சடலங்களும் காணப்பட்டதாக பிபிசி செய்தி குறிப்பிடு கிறது.

தாக்குதலில் காயமுற்ற குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!