ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் பலர் பலி

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் அன்பார் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் அக்குழுவைச் சேர்ந்த போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஈராக்கிய அதிகாரிகள் கூறினர். தாக்குதலை நடத்திய போராளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈராக்கில் பல பகுதிகளில் ராணுவ வீரர்களையும் போலிசாரையும் குறிவைத்து ஐஎஸ் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐஎஸ் போராளிகளைத் தோற்கடிக்க ஈராக்கிய ராணுவம் கூட்டணிப் படையின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கிர்குக் நகரில் காரில் சென்ற மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கூறின.2017-05-04 06:00:00 +0800