தென்கொரியாவில் மாற்றத்தை விரும்பும் இளம் வாக்காளர்கள்

சோல்: அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவும் வேளையில் தென்கொரிய மக்கள் தங்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்களிக்க வுள்ளனர். ஊழல் விவகாரம் தொடர்பில் தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹை மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிபர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதையடுத்து அங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. ஏழு மாதங்களுக்கு முன்னதாகவே இத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் நேற்று தங்கள் இறுதி நேர பிரசாரத்தில் ஈடு பட்டிருந்த சமயம் தென்கொரியா வில் மாற்றம் தேவை என்று இளம் வாக்காளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தென்கொரியா ஜனநாயக நாடாக மாறி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்த முப்பது ஆண்டு காலத்தில் தங்களின் எதிர்கால வெற்றி வாய்ப்பு குறித்து இளம் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாட்டின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துள்ளது. வேலை வாய்ப்புக்கான எதிர்காலமும் பிரகாசமாக இல்லை. இதனால் நாட்டில் மாற்றம் தேவை என்று இளம் வாக்காளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!