சுடச் சுடச் செய்திகள்

‘அமெரிக்கா தேடும் பயங்கரவாதி தப்பிச் சென்றிருக்கக்கூடும்’

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதி மராவி நகரில் போராளி களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஐந்து வாரங்களாக சண்டை நீடிக்கும் வேளையில் அமெரிக்கா தேடி வரும் பயங்கரவாதிகளில் ஒரு வரான இஸ்னிலான் ஹெபிலான் அந்நகரிலிருந்து தப்பிச் சென் றிருக்கலாம் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐஎஸ் குழுவுக்கு தலைவன் என்று கூறப்படும் பிலிப்பீன்ஸ் போராளியான இஸ்னிலான் ஹெபிலானை மராவியில் சண்டை நடக்கும் பகுதியில் காணவில்லை என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மராவி நகரில் போராளி ஹெபிலானை பிலிப்பீன்ஸ் அரசாங்கப் படையினர் கடந்த மே 23ஆம் தேதி கைது செய்ய முயன்ற போதுதான் இஸ்லாமியப் போராளிகள் பலர் ஐஎஸ் கொடி யுடன் அந்நகருக்குள் ஊடுருவி பல பகுதிகளைக் கைப்பற்றினர். மராவி நகரில் ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பல வாரங் களாக சண்டை நீடிக்கிறது. போராளிகளை தோற்கடிக்க ராணுவம் சிரமப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon