ஹாங்காங் மக்களுக்கு சீன அதிபர் எச்சரிக்கை

ஹாங்காங்: சீனாவின் இறை யாண்மைக்கு எதிரான எந்த ஒரு சவாலையும் சீனா சகித்துக் கொள்ளாது என்று ஹாங்காங் வந்திருந்த சீன அதிபர் ஸி ஜின்பிங் எச்சரித்தார். திருவாட்டி மேரி லாம் ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் திரு ஜின்பிங் கலந்துகொண்டார். ஹாங்காங் மீது சீனாவுக்கு அதிகார உரிமை இருப்பதாகவும் திரு ஜின்பிங் சொன்னார். இருப்பினும் மாறுபட்ட அரசியல் கருத்துகளை உடையவர்களிடம் சீன அரசாங்கம் பேச்சுநடத்த தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

ஒரே நாடு, இரு முறைகள் என்ற கொள்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதற்கிடையே ஹாங்காங் கின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் பெண்மணியான திருவாட்டி மேரி லாம், சமூக நல்லிணக் கத்தைக் கட்டிக்காக்க கடப்பாடு கொண்டுள்ளதாக உறுதி கூறினார். சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டு 20 ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு ஹாங்காங் வந்திருந்த சீன அதிபர் நேற்று ஹாங்காங் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பியதாக தகவல்கள் கூறுகின்றன.