இலங்கையில் 80,000 பேருக்கு டெங்கி; 200க்கு மேற்பட்டவர்கள் மரணம்

இலங்கையில் இதுவரை காணாத அளவுக்கு டெங்கி நோய் வேக மாகப் பரவி வருவதால் அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத் தில் இருந்து ஜூன் மாத இறுதி வரையில் கிட்டத்தட்ட 80,000 பேருக்கு டெங்கி தொற்றியதாக இலங்கை சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த காலகட்டத்தில் டெங்கி யால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 227 பேர் மாண்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு இதேபோல ஜூன் மாத இறுதிவரை டெங்கி கண்டவர்களின் எண்ணிக்கை 23,000 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல, மாண்டோர் எண்ணிக்கையும் 97லிருந்து 227க்கு அதிகரித்து உள்ளது. அதற்கு அண்மையில் பெய்த பலத்த மழையும் பெருவெள்ளமும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

வெள்ளத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் கொசுப் பெருக்கம் அதிகரித்தது. குப்பைக் கூளங்களும் பெருகின. இவற்றால் டெங்கி வேகமாகப் பரவியது. அன்றாடம் நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் அனு மதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்க மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தலைநகர் கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட் டங்களை உள்ளடக்கிய பகுதியில் தான் அதிகமான கொசுப் பெருக் கம் காணப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் வித்தியாசம் பாராமல் அனைத்து மக்களும் போர்க்கால அடிப்படையில் டெங்கிக்கு எதிராகச் செயல்படுமாறு அதிபர் மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.