வடகொரியா: கிம் உலகத் தலைவர்

சோல்: வடகொரியா தொலைக் காட்சி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சந்தித்த கிம் ஜோங் உன்னை உலகத் தலைவராக வருணித்து தொலைக்காட்சி படங்களை ஒளி பரப்பியுள்ளது. "உலகின் முக்கிய தலைவர் கிம். உலகம் முழுவதும் பெரும் மதிப்புக்குரியவராகப் போற்றப் படுவார்," என்று அந்நாட்டின் தொலைக்காட்சி தெரிவித்தது. கொரிய மத்திய தொலைக் காட்சியில் கிம்மை பாராட்டும் நாற்பது நிமிட ஆவணப் படம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் சிங்கப்பூரில் இரவு நேரத்தில் நீர் முகப்பை கிம் சுற்றி வரும் காட்சிகளும் இடம்பெற்றிருந் தன.

"சிங்கப்பூர் அவரை ஆழ்ந்த மரியாதையுடனும் ஆவலுடனும் வரவேற்றது," என்று தொலைக் காட்சியின் பின்னணியில் ஒலித்த பெண் குரல் குறிப்பிட்டது. "திரு கிம் அரசியல் புத்திக் கூர்மையுடன் உலக அரசியலுக்கு தலைமையேற்க வந்துள்ளார். எங்கு சென்றாலும் மக்கள் அவரை ஆர்வத்துடன் வரவேற்றனர்," என்ற வருணனையுடன் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் திரு கிம் கரையோரப் பூந்தோட்டத் தைச் சுற்றிப் பார்க்கும் காட்சிகள் காட்டப்பட்டன. அதில் பொதுமக்கள் கிம்மை கைத்தொலை பேசியில் படம் பிடிப்பதையும் காண முடிந்தது. "உலகமே காத்திருந்த இந்த நூற்றாண்டின் சந்திப்பு இறுதியில் நிகழ்ந்துள்ளது," என்று பின்னணியில் கூறியபோது செந்தோசா தீவுக்கு திரு கிம்மின் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் ஒளியேற்றப்பட்டன.

சிங்கப்பூரில் உச்சநிலை சந்திப்பில் திரு கிம் பங்கேற்கும் காட்சிகளை வடகொரிய மக்கள் பார்க்கின்றனர். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!