ஏவுகணை சோதனைத் தளம் அழிப்பு: பணியை நிறுத்தியது வடகொரியா

வா‌ஷிங்டன்: அணுவாயுதங்களைக் கைவிட வடகொரியா உறுதி அளித் துள்ள போதிலும் வடகொரியாவின் அண்மைய செயல்கள் அதற்கு மாறாக உள்ளன என்று வா‌ஷிங்டன் அமைப்பு ஒன்றின் அறிக்கை தெரிவித்துள்ளது.

வடகொரியா அதன் ஏவுகணை என்ஜின் சோதனை இடத்தை அழிக்கும் பணியை நிறுத்தி வைத் திருப்பதை சென்ற வாரம் எடுக்கப் பட்ட துணைக்கோளப் படங்கள் காட்டுவதாக வா‌ஷிங்டன் ஆய்வு அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குப் பிறகு அந்தச் சோதனை இடத்தை அழிப்பதற்கான பணியை வடகொரியா தொடர்ந்து மேற்கொள்ள வில்லை என்பது துணைக்கோளப் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

திரு கிம் கொடுத்த வாக்குறுதிப்படி அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனை இடத்தை அழிக்கும் வட கொரியாவின் நடவடிக்கையில் முன்னேற்றம் இருந்த போதிலும் தற்போது அப்பணியை அந்நாடு நிறுத்தி வைத்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!