$6.6 மி. இழப்பை எதிர்நோக்கும் மலேசிய விமான நிறுவனம்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஆகாயவெளி சர்ச் சையைத் தொடர்ந்து மலேசிய மலிவுக்கட்டண விமான நிறுவன மான ஃபயர்ஃபிளை பேரிழப்பை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான அதன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாதாந்திர அடிப்படையில் 20 மில் லியன் ரிங்கிட் (S$6.6 மில்லியன்) வரை வருமான இழப்பு ஏற்படும் என்று ஃபயர்ஃபிளை குறிப்பிட்டு உள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் குழு மத்தைச் சேர்ந்த துணை நிறுவனம் ஃபயர்ஃபிளை. “ஃபயர்ஃபிளை கடந்த மூன்றாண்டுகளாகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.

ஆனால் இது எங்கள் குழுமத்துக்குப் பேரிழப்பு,” என்று குழுமத்தின் தலைமை நிர் வாக அதிகாரி இஷாம் இஸ்மாயில் ‘த மலேசியன் இன்சைட்’ ஊட கத்திடம் கூறினார். தினந்தோறும் 20 விமானச் சேவைகளை நடத்தி வந்த ஃபயர் ஃபிளை, சிலாங்கூர் மாநிலத்தின் சுபாங் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேரடிச் சேவையில் ஈடுபட்டு வந்தது. சிங்கப்பூர்=மலேசியா இடையி லான சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் வரையிலும் ஒழுங்குமுறை விதிகளை இருநாடுகளின் விமானப் போக்குவரத்து அதி காரிகளும் பேசி இறுதி செய்யும் வரையிலும் சிலேத்தார் விமான நிலையத்தில் தரை இறங்க ஃபயர் ஃபிளை விமான நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.