சிரியா: 5,000 பேர் வெளியேற்றம்

டமாஸ்கஸ்: கிழக்கு சிரியாவில் கடைசியாக எஞ்சியுள்ள ஐஎஸ்  ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை முதல் 500 போராளிகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 பேர் வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் என்றும் அவர்கள் போராளிகளின் குடும்பத்தினர் என்றும் சொல்லப் படுகிறது. அப்பகுதியிலிருந்து போராளிகளை அகற்ற அமெரிக்க தலைமையிலான குர்திய கூட்டணிப் படைகள் செப்டம்பர் மாதத்திலிருந்து போரிட்டு வருகின்றன.