பிலிப்பீன்சில் தாய்மார்களுக்கு இரட்டிப்பாகும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு

மணிலா: பிலிப்பீன்சில் வேலைக்குச் செல்லும் புதிய தாய் மார்களுக்கு வழங்கப்படும் மகப் பேறு விடுப்பை அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே நீட்டித்து உள்ளார்.
தென்கிழக்காசியாவிலேயே ஊழியரணியில் மகளிரின் பங்கு மிகக் குறைவான அளவைக் கொண்ட நாடு பிலிப்பீன்ஸ். 
அவ்வகையில், அந்நாட்டின் ஊழியரணியில் கூடுதலான மகளிர் சேர இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படு கிறது.
சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தற்போதைய 60லிருந்து 105 நாட்களாக நீட்டிக்கப்பட புதிய சட்டம் வகைசெய்கிறது. அந்த விடுப்பில் ஏழு நாட்கள் தந்தைகளுக்கு வழங்கப்படலாம்.
ஒற்றை தாய்மார்களுக்குக் கூடுதலாக 15 நாட்கள் கிடைக்கும். 
பிலிப்பீன்சில் பாதிக்கும் மேற்பட்ட மகளிர் ஊழியரணியில் இடம்பெறவில்லை என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.
தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவப் பொறுப்புகள் வகிக்கும் மகளிரைப் பொறுத்தவரை, ஆசி யாவில் பிலிப்பீன்ஸ் முன்னணி வகித்தாலும், அத்தகைய மகளிர் வசதிமிகுந்த பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.