சுடச் சுடச் செய்திகள்

‘சீனாவை வாட்டும் வரிவிதிப்பு’

வா‌ஷிங்டன்: சீன இறக்குமதிகள் மீது வரிவிதிப்பினால் ஏராளமான நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி வியட்னாம் உட்பட ஆசியாவின் மற்ற நாடுகளில் பொருள் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். சீனாவுடனான எந்த வொரு ஒப்பந்தமும் 50-50 என்ற நிலையில் நிறைவேற்றப்படக் கூடாது என்றார் அவர்.

அமெரிக்காவின் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஒளிவழிக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டி, நேற்று முன்தினம் ஒளியேறியது. அதில் அவர், அமெரிக்காவும் சீனாவும் மிகச் சிறந்த ஒப்பந்தத்தை எட்டியிருந்தாலும் அதை சீனா மாற்றிவிட்டதாகக் குறைகூறினார். எனவேதான், சீன பொருட்கள் மீது வரிவிதிப்பைத் தாம் அறிவித்த தாக திரு டிரம்ப் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக இம்மாதம் 10ஆம் தேதி நடந்த வர்த்தகப் பேச்சுவார்த் தையைத் தொடர்ந்து, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இன்னும் நாள் குறிக்கப் படவில்லை.

வரிவிதிப்பினால் சீனா மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாகக் கூறிய திரு டிரம்ப், இறுதியில் அமெரிக்கா வுடன் அந்நாடு ஒப்பந்தத்தை எட்டுவதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை என்றார்.

உலகின் இரு ஆகப் பெரிய பொருளியல்களுக்கு இடையே மோசமடையும் வர்த்தகப் போர் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கருத்துரைத்த திரு டிரம்ப், தமது ஆட்சியின்கீழ் சீனா உலகின் ஆகப் பெரிய பொருளியலாக உருவெடுக்க முடியாது என்று கங்கணம் கட்டினார்.

வர்த்தகப் போர் எப்போது முடிவுறும் என்று கேட்கப்பட்டதற்கு, “வரிவிதிப்பால் எங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர் வருவாய் கிடைத்துள்ளது. சீனா எங்களைப்போல சிறப்பாகச் செய்யவில்லை,” என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon