மீனுக்காக போட்ட குண்டு மூவரின் உயிரைப் பறித்தது

கோத்தா கினபாலு: முக்குளிப்பாளர் கள் பெரிதும் விரும்பி நாடும் சாபாவின் புலாவ் காலாபுவான் நீர் நிலைகளில் நேற்று முன்தினம் போடப்பட்ட மீன்பிடி குண்டில் மூவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றறவாளிகளையும் தேடும் பணியில் மலேசிய போலிஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் தொடர்பில் 24 வயது படகோட்டியையும் 23 வயது சுற் றுப்பயண வழிகாட்டியையும் அதி காரிகள் தடுப்புக் காவலில் விசாரித்து வருகின்றனர்.

முக்குளிப்புப் பயிற்றுவிப்பாள ரான மலேசியர் அப் ஸைனல் அப்து, 30 மற்றும் 26 வயதுடைய இரு சீன நாட்டவர்களான ஸாவ் ஸே„ங், சூ இங்ஜியயும் மாலை ஐந்து மணியளவில் முக்குளித்த வண்ணம் இருந்தபோது, மீன் பிடிப்பதற்காக போடப்பட்ட குண் டால் உயிரிழந்தனர்.

நிறைய மீன்கள் இறந்து மிதந்ததைக் கொண்டு அவற்றைப் பிடிப்பதற்காகவே குண்டு பயன் படுத்தப்பட்டது என்றும் இதனால் அவ்விடத்தில் முக்குளிக்க வந்த மூவரும் பலியாகினர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணை கூறு கிறது.

இறந்தோரின் சடலங்கள் கிட் டத்தட்ட 5.8 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் அவர்களின் முக்குளிப்புச் சாத னங்களும் அருகிலிருந்த பவளப் பாறையும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டன.

கைதாகியுள்ள இருவரும் முக் குளிப்பாளர்களை நீர்நிலை அரு கில் விட்டுச் சென்றபோது தங் களின் முக்குளிப்பைச் சரியாகத் திட்டமிட்டுச் செல்லுமாறு கூறிய தாகவும் ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது அவ்விடத்தில் கடல் நுரை அதிகமாக இருந் ததைக் கண்டு உதவிக்கு அழைத் ததாகவும் கூறப்பட்டது.

சம்பவம் நடந்த சமயத்தில் மேலும் சில படகுகள் அந்நீர்நிலைப் பகுதியில் இருந்ததாகவும் அவை மீன்பிடிக்கும் குண்டால் பாதிக்கப் படவில்லை என்றும் போலிசார் நடத்தி வரும் ஆக அண்மைய விசாரணை கூறுகிறது.

இந்த அசம்பாவிதம் தொடர்பில் இறந்த முக்குளிப்பாளர்களுக்காக தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை ஃபேஸ்புக் வழி பலர் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இது போன்ற சட்டவிரோத முறையில் குண்டு வைத்து மீன் பிடிப்பதை உடனே நிறுத்திட அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்குளிப்பாளர் வட்டத்தினரும் தங்களின் ஆதங் கத்தைத் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!