தனது நிர்வாகத்தைக் குறைகூறிய தூதரை இணையத்தில் சாடும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது நிர்வாகத்தைச் சாடிய பிரிட்டிஷ் தூதரையும் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயையும் கண்டித்திருக்கிறார். டிரம்ப்பின் நிர்வாகம் “சீரற்றது” என்றும் “திறமையில்லாதது” என்றும் அந்தத் தூதர் கூறியதைக் காட்டும் தனிப்பட்ட குறிப்புகள் கசிந்தது குறித்து பிரிட்டன் வருத்தத்துடன் இருக்கும் வேளையில் திரு டிரம்ப் தமது காட்டத்தை வெளிப்படுத்தினார்.

“டிரம்ப் நிர்வாகத்தினரிடம் நாங்கள் பேசி வருகிறோம். இந்தத் தகவல் கசிவு ஏற்புடையதன்று. இதற்காக நாங்கள் நிச்சயம் வருந்துகிறோம்,” என்று திருமதி மேயின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக, பிரெக்சிட் விவகாரத்தைத் திருமதி மே கையாண்ட விதத்தைத் திரு டிரம்ப் குறை கூறினார். தமது ஆலோசனைக்குத் திருமதி மே செவிசாய்க்கவில்லை என்று திரு டிரம்ப் கூறினார்.

“அவரும் அவரது பிரதிநிதிகளும் இப்படி ஒரு குழப்படியை உருவாக்கியுள்ளனர். எனக்கு அந்தத் தூதரைத் தெரியாது. ஆனால் அமெரிக்காவில் அவர் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. அவருடன் நான் ஒத்துழைப்பதாக இல்லை,” என்றார் திரு டிரம்ப்.

மேலும், பிரிட்டனுக்குப் புதிய பிரதமர் ஒருவர் கிடைக்கப்போவது நல்ல செய்தி என்றும் பிரிட்டனுக்குச் சென்றபோது தம்மை பெரிதும் கவர்ந்தவர் எலிசபத் அரசிதான் என்றும் திரு டிரம்ப் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!