நல்ல நாளன்று திருமணம் செய்த 99 மலேசிய தம்பதியர்

மலேசியாவிலுள்ள சீனக் கோயில் ஒன்றில் 99 மலேசியத் தம்பதியர் ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

சீனர்களின் பாரம்பரிய நாள்காட்டியின் ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாவது நாள் திருமணம் செய்வதற்கு உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது. 

கோலாலம்பூரின் தியேன் ஹாவ் கோவிலில் இந்த விழா திங்கட்கிழமை  நடைபெற்றது.