கர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைகளைக் கையாண்டு வருகிறது.

அந்த வரிசையில் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றால் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை எளிதில் கிடைத்துவிடும்.

இதனால் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக பல நாடுகளிலிருந்து கர்ப்பிணிகள் வேண்டுமென்றே அமெரிக்காவுக்குப் பயணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கக் குடியுரிமையின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!