கொரோனா கிருமித்தொற்றின் காரணமாக உணவு விலை வீழ்ச்சி: ஐநா

நியூயார்க்: உலக அள­வில் கொரோனா கிருமி பர­வல் ஏற்­ப­டுத்­திய பாதிப்­பா­லும் எண்­ணெய் விலை வீழ்ச்சி கார­ண­மா­க­வும் உல­கில் உணவு விலை­கள் கடந்த மார்ச் மாதம் கடும் வீழ்ச்சி கண்­ட­தாக ஐக்­கிய நாடு­கள் சபை­யின் உணவு, வேளாண் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

அந்த நிறு­வ­னம் மாதந்­தோ­றும் குறிப்­பிட்ட உணவு வகை­க­ளின் ஏற்ற இறக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் உணவு விலைக் குறி­யீடு ஒன்றை வெளி­யி­டு­கிறது. அதில் தானிய வகை­கள், பாலி­லி­ருந்து செய்­யப்­படும் பொருட்­கள், இறைச்சி, சீனி போன்­றவை அடக்­கம்.

இந்தக் குறி­யீடு சென்ற மாதம் 172.2 புள்­ளி­க­ளாக இருந்­தது. ஒப்­பு­நோக்க, இது பிப்­ர­வரி மாதத்­தைக் காட்­டி­லும் 4.3% குறைவு என்று ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் தெரி­விக்­கிறது.

“இந்த விலை வீழ்ச்சி இந்­தப் பொருட்­க­ளுக்­கான தேவை­யைப் பொறுத்­தது. அந்­தத் தேவை­யின் அள­வு பொரு­ளி­யல் நிலைமை மோச­ம­டை­வ­தால் பாதிக்­கப்படு­கிறது,” என்று ஐநா­வின் உணவு, வேளாண் நிறு­வ­னத்­தின் மூத்த பொரு­ளா­தார நிபு­ண­ரான அப்­துல் ரேசா என்­ப­வர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், உல­கின் தானிய உற்­பத்­தி­யும் அதிக­ரிக்­கும் என்று ஐநா­வின் உணவு நிறு­வ­னம் கணக்­கி­டு­கிறது. அதன்­படி, சென்ற ஆண்டு 2,721 பில்­லி­யன் டன் தானிய உற்­பத்தி ஏற்­பட்­ட­தா­க­வும் இது முந்­தைய கணிப்­பான 2,719 டன்னை விட அதி­கம் என்­றும் அது கூறு­கிறது. மேலும் இது அதற்கு முந்­தைய ஆண்­டான 2018ல் உற்­பத்­தி­யான தானி­யத்­தை­விட 2.4% அதி­கம் என்­றும் அது கூறு­கிறது. இதில் சீனி­யின் விலை­தான் மிக அதி­க­மாக, 19.1%, வீழ்ச்சி கண்­டுள்­ள­தாக அந்த நிறு­வ­னம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

இதே­போல், செம்பனை எண்­ணெய் வீழ்ச்­சி­யால் காய்­க­றி­க­ளின் விலை­யும் 12% வீழ்ச்சி கண்­ட­தாக அந்த நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்த வீழ்ச்­சிக்கு கொரோனா கிருமி பர­வ­லால் பல நாடு­கள் முடக்க நிலை­யில் இருப்­ப­தா­லும் எண்­ணெய் விலை வீழ்ச்­சி­யால் எண்­ணெய் வள நாடு­க­ளின் காய்­க­றித் தேவை குைறந்­த­தும் கார­ணங்­க­ளாக அந்த நிறு­வ­னம் கூறு­கிறது.

“எண்­ணெய் விலை பாதிக்கு பாதி வீழ்ந்­து­விட்­டது. இத­னால், உண­வுச் சந்­தை­யில், சீனி, தாவர எண்­ணெய் வகை­க­ளுக்­கான தேவை குறைந்­துள்­ளது,” என்று ஐநா­வின் உணவு, வேளாண் நிறு­வ­னத்­தின் ஆய்­வா­ளர் பீட்­டர் தோனெஸ் கூறு­கி­றார்.

இதே­போல், பால் பொருட்­க­ளின் விலை, தானி­யங்­க­ளின் விலை ஆகி­ய­வை­யும் வீழ்ச்சி கண்­டுள்­ள­தாக அந்த நிறு­வ­னம் சுட்­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!