முகக்கவசம் அணியாவிட்டால் மூன்றாண்டு சிறை தண்டனை: கத்தார் அரசாங்கம் அதிரடி

தோஹா: கொரோனா தொற்­றைத் தடுக்க பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வதை சுமார் 50 நாடு­கள் கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளன. மீறு­வோ­ருக்கு பல நாடு­கள் அபா­ர­த­மும் விதிக்­கின்­றன.

முகக்­க­வ­சம் அணி­யா­விட்­டால் மத்­திய அமெ­ரிக்க நாடு ஒன்­றில் 15 நாள் சிறைத் தண்டனையும் மொராக்­கோ­வில் மூன்று மாத சிறைத் தண்­டனையும் விதிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் இத்­த­கைய தடுப்பு நட­வ­டிக்­கை­களை செயல்­ப­டுத்­து­வ­தில் ஒரு படி மேலே சென்­றுள்­ளது வளை­குடா நாடு­களில் ஒன்­றான கத்­தார்.

இங்கு முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­தோடு மட்­டு­மல்­லா­மல், அந்த உத்­த­ரவை மீறு­ப­வர்­க­ளுக்கு மூன்­றாண்டு சிறைத் தண்­ட­னை­யை அனுபவிக்க நேரிடும் என்று அறிவித்துள்ளது கத்­தார் அர­சாங்­கம்.

இதுத­விர அவர்­க­ளுக்கு S$78,600 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும். நேற்று முதல் இந்த உத்­த­ரவு நடை­மு­றைக்கு வந்­துள்­ளது.

2.75 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட கத்­தா­ரில் 1.1 விழுக்­காட்­டி­னர் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். அங்கு சுமார் 30,000 பேரைக் கிரு­மித்­ தொற்­றி­யுள்­ளது. 15 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!