செய்திக்கொத்து (3-6-2020) உலகம்

நியூசிலாந்து: அனைத்துக் கட்டுப்பாடும் அடுத்த வாரம் தளர்த்தப்படும்

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் மீத­முள்ள அனைத்து கட்­டுப்­பா­டு­களும் அடுத்த வாரம் நீக்­கப்­ப­டக்­கூ­டும் என்று நியூ­சி­லாந்­தின் பிர­த­மர் ஜசிந்தா ஆர்­டெர்ன் தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூர் கிரு­மிப் பர­வல் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அடுத்த வாரம் நியூ­சி­லாந்து எச்­ச­ரிக்கை நிலை 1க்கு செல்ல முடி­யும் என்ற அவர், அனைத்து சமூக தொலை­தூர நட­வ­டிக்­கை­கள் மற்­றும் மக்­கள் பெரு­ம­ள­வில் கூடு­வது தொடர்­பான தடை­கள் நீக்­கப்­படும் என்­றார். ஆனால் எல்­லை­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

“வெகு விரை­வில் இயல்பு நிலைக்குத் திரும்­பிய உலக நாடு­களில் ஒன்­றாக நாம் இருப்­போம்,” என்று ஆர்­டெர்ன் கூறி­னார்.


மருத்துவர்களுக்கு என்95 முகக்கவசமே நல்ல பலன் தரும் - அமெரிக்கா பரிந்துரை

லண்டன்: கொரோனா தொற்­றில் இருந்து மருத்­து­வர்­க­ளைப் பாது­காக்க அறுவை சிகிச்சை முகக்­க­வ­சங்­க­ளை­விட என்95 முகக்­க­வ­சங்­களே சிறந்­தது என்று ஜார்ஜ் வாஷிங்­டன் பல்­க­லைக்­க­ழக பேரா­சிரி­யர் டேவிட் மிக்­கல்ஸ் தலை­மை­யில் நடை­பெற்ற ஆய்வு தெரி­விக்­கிறது.

தாதி­கள், மருத்­து­வர்­கள் உள்­ளிட்ட சுகா­தார ஊழி­யர்­கள் என்95 முகக்­க­வ­சம் அணி­வ­தற்கு உலக சுகா­தார அமைப்­பும் அமெ­ரிக்க தொற்­று­நோய் கட்­டுப்­பாட்டு மைய­மும் பரிந்­து­ரைக்க வேண்­டும் என்­பதை இந்த ஆய்வு தெளி­வு­ப­டுத்­து­கிறது. முன்னதாக சுகாதார ஊழியர்களுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசம் போதுமானது என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.


மலேசியாவில் தொடர்ந்து 11வது நாளாக உயிரிழப்பு இல்லை

புத்ரஜெயா: மலேசியாவில் நேற்று மேலும் 20 பேருக்கு கிருமித் தொற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மலேசியாவில் மொத்தம் 7,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 11வது நாளாக மரணம் ஏதும் நிகழவில்லை.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 20 பாதிப்புகளில் 15 பேர் வெளிநாட்டினர். 2 பேர் மலேசியர்கள். இன்று 66 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,470ஆக உயர்ந்தது.

1,292 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!