‘ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 3 பில்லியன் விலங்குகள் மாண்டிருக்கக்கூடும்’

ஆஸ்திரேலியாவில் 2019ன் பிற்பகுதியில் தொடங்கி இவ்வாண்டு தொடக்கம் வரை நீடித்த காட்டுத்தீயில் சுமார் 3 பில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடங்களுக்கு பெயர்ந்து சென்றிருக்கலாம் என்று ஆஸ்தி
ரேலிய பல்கலைக் கழகங்களின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய விலங்குகள் உணவுப் பற்றாக்குறை, எதிரிகளிடமிருந்து தப்பிப்பது ஆகியவற்றால் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு சற்று குறைவுதான் என்றும் அவர்கள் கூறினர்.

அவற்றுள் 143 மில்லியன் பாலூட்டிகள் 2.46 பில்லியன் ஊர்வன, 180 மில்லியன் பறவைகள், 51 மில்லியன் தவளைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 115,000 சதுர மீட்டர்கள் புதர்வெளியில் இந்தத் தீ மூண்டது. இந்தத் தீயில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.