டிரம்ப்: டிக் டாக் செயலிக்குத் தடை

'டிக் டாக்' செயலிக்குத் தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடவிருப்பதாக என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

‘டிக் டாக்’ உட்பட 40க்கு மேற்பட்ட சீன செயலிகளுக்கு அண்மையில் இந்தியா தடை விதித்தது.

அந்த நிறுவனம் தனிப்பட்டவர்களின் தகவல்களை கையாளும் விதம் குறித்து குறைகூறப்படுகிறது.

சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.