ரோஹிங்யா இனப்படுகொலை: இரு ராணுவ வீரர்கள் சாட்சியம்

ரோஹிங்ய மக்கள் மீது இனப்படுகொலையில் ஈடு பட்டதை மியன்மார் ராணுவத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புக்கொண்டு உள்ளனர். மியன்­மா­ர் ராணு­வம் ரோஹிங்யா இன மக்­க­ளுக்கு எதி­ராக இனப்­ப­டு­கொ­லை­யில் ஈடு­பட்டு­ வ­ரு­வ­தா­கக் கூறி கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் அக­தி­கள் பங்­ளா­தேஷ் நாட்­டில் தஞ்­சம் புகுந்­துள்­ள­னர்.

இந்­தக் குற்­றச்­சாட்டை மியன்­மார் அர­சும் அந்­நாட்டு ராணு­வ­மும் மறுத்துவரும் நிலை­யில், தற்­பொ­ழுது அந்­நாட்டு ராணுவ வீரர்­கள் இரு­வர் இனப்­ப­டு­கொ­லை­யில் ஈடு­பட்­டதை ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்.

அதில் ஒரு­வ­ரான மியோ வின் தன் என்­ப­வர் தமக்கு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிடைத்த உத்­த­ரவு, “கண்­ணில் யார் தென்­பட்­டா­லும், காதால் கேட்­கும் அனைத்­தை­யும் சுட­வும்,” என்று காணொளி ஒன்­றில் தமது சாட்­சி­ய­மா­கப் பதிவு செய்­துள்­ளார்.

அந்த உத்­த­ர­வுக்கு இணங்க தான் 30 ரோஹிங்யா முஸ்­லிம்­களை சுட்­டுக் கொன்­ற­து­டன் அவர்­களை கோபு­ரத்­துக்­கும் ராணு­வத் தளத்­துக்­கும் அரு­கில் பெரிய புதை­குழி ஒன்­றில் புதைத்­த­தா­க­வும் கூறி­யுள்­ள­ளார்.

ஏறத்­தாழ இதே சம­யத்­தில் பக்­கத்­தில் உள்ள இன்­னொரு நக­ரத்­தில் மற்­றொரு வீர­ரான ஸோ நைங் தன் என்­ப­வர் தனக்­கும் தனது சக வீரர்­க­ளுக்­கும் இதே போன்ற உத்­த­ரவு பிறப்பிக்­கப்­பட்­ட­தா­கக் கூறு­கி­றார்.

அவர்­க­ளது உயர் அதி­காரி, “பார்க்­கும் அனை­வ­ரை­யும், அவர்­கள் வய­தா­ன­வர்­க­ளா­ன­லும் சரி, குழந்­தை­க­ளா­னா­லும் சரி, சுட்­டுக் ெகால்­லுங்­கள்,” என்று கூறி­ய­தாக தெரி­வித்­துள்­ளார்.

“நாங்­கள் சுமார் 20 கிரா­மங்­களை அழித்­தோம்,” என்று கூறும் இவர், கொன்­ற­வர்­க­ளின் உடல்­களை ெபரிய புதை­கு­ழி­யில் புதைத்­த­தாக சொல்­கி­றார்.

இந்த இரண்டு வீரர்­க­ளின் காணொ­ளியை போட்டி போரா­ளிக் குழு பதிவு செய்­த­தாக பத்­தி­ரி­கைத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மியன்­மா­ரில் உள்ள ரோஹிங்யா முஸ்­லிம்­களை அந்­நாட்டு ராணு­வம் இனப்­ப­டு­கொலை செய்­துள்­ள­தாக ஐநா அதி­கா­ரி­கள் தொடர்ந்து கூறி­வ­ரும் நிலை­யில், இதன் தொடர்­பில் அந்­நாட்டு ராணுவ வீரர்­களே ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் அளித்­தி­ருப்­பது இதுவே முதல் முறை என்று கூறப்­ப­டு­கிறது.

இவர்­கள் இரு­வ­ரும் மியன்­மா­ரில் இருந்து சென்ற மாதம் தப்­பித்­த­னர் என்­றும் தற்­பொ­ழுது இவர்­கள் ஹேக்­கில் உள்ள அனைத்­து­லக குற்­ற­

வி­யல் நீதி­மன்­றத்­தின் கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

அந்த நீதி­மன்­றத்­தில் மியன்­மார் ராணு­வத் தலை­வர்­கள் தங்­கள் நாட்­டின் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை தொடர்­பான விசா­ர­ணையை எதிர்­நோக்­கி­யுள்ள நிலை­யில் இவ்­விரு வீரர்­க­ளின் சாட்­சி­யம் வந்­தி­ருப்­பது முக்­கி­ய­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இவ்­விரு வீரர்­க­ளின் சாட்­சி­ய­மும் இது­வரை ரோஹிங்யா அக­தி­கள் கூறி­வ­ரு­வதை மெய்ப்­பிப்­ப­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!