சீன இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் டிரம்புக்கு எதிராக வழக்குகள்

சீன இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் டிரம்புக்கு எதிராக வழக்குகள்

1 mins read
e7894799-dd7b-48c4-a7a6-2c090ee3b1b1
-

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளை அந்நாட்டின் வர்த்தகங்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. கார் நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 3,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், சீனாவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் விதித்திருக்கும் வர்த்தக வரிகளை எதிர்த்து சட்ட ரீதியான பதில் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

பல மில்லியன் டாலர் மதிப்பிலான சீன இறக்குமதிகளை பாதிக்கும் விதமாக திரு டிரம்ப் சீனாவுக்கு எதிராக எல்லைமீறிய வர்த்தகப் போரை விதிப்பதாக இந்நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வால்கிரீன், மெர்செடிஸ் பென்ஸ், வால்வோ ஆகியவையும் அடங்கும்.

இவ்விரண்டு நாடுகளுக்கு எதிரான வர்த்தக பூசல் 2018ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.