28,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி

கொவிட்-19னின் தாக்கம் காரணமாக பொழுதுபோக்குக் கூடங்களுக்கு மக்களின் வருகை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனம் 28,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொழுதுபோக்கு பூங்காக்கள், சொகுசுக் கப்பல்கள், சில்லறை விற்பனை போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று டிஸ்னி நிறுவனம் தெரிவித்தது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 67 விழுக்காட்டினர் பகுதி நேரப் பணியாளர்கள் என்றாலும் நிர்வாகிகள், நிரந்தரப் பணியாளர்களும் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

90 நாட்களுக்கான வேலை வாய்ப்பு சேவை உள்ளிட்ட வேறு நலன்களையும் அந்நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்குகிறது.

டிஸ்னி நிறுவனப் பங்குகள் இவ்வாண்டு ஏற்கெனவே 13 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியான பிறகு நேற்று மேலும் 2 விழுக்காடு குறைந்தது.

செப்டம்பர் 2019 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் வால்ட் டிஸ்னி குழுமத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 223,000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பயணம், சுற்றுலா போன்றவை மெதுவடையக்கூடும் என்பதை இது காட்டுவதாகக் கூறப்படும் நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் குழுமம் 19,000 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படலாம் எனவும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!