இறுதிக்கட்ட ஆதரவு திரட்டுவதில் டிரம்ப் மும்முரம்

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கத் தேர்­தலுக்கு இன்­னும் சில நாட்­களே உள்­ளன. இந்­நி­லை­யில் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப், தேர்­த­லில் தம்மை எதிர்த்து நிற்­கும் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் ஜோ பைட­னுக்கு எதி­ராக ஆத­ரவு திரட்ட நியூ ஹேம்­ஷி­ய­ருக்கு நேற்று பிர­சா­ரப் பய­ணம் மேற்­கொண்­டார். இந்த மாநி­லம், 2016ஆம் ஆண்­டில் நடந்த தேர்­த­லில் டிரம்ப்­பின் கையை விட்டு நழு­வி­யது. நேற்­றைய பிர­சா­ரப் பய­ணத்­தின் மூலம், எப்­ப­டி­யும் அந்த மாநி­லத்­தின் ஆத­ரவை இந்­தத் தேர்­த­லில் பெற்­று­விட வேண்­டும் என்­ப­தில் திரு டிரம்ப் தீவி­ரம் காட்­டு­வது புல­னா­கி­யுள்­ளது.

தேசிய அள­வில் நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பு­களில் திரு பைடனே முன்­ன­ணி­யில் உள்­ளார். இதனை முறி­ய­டிப்­ப­தற்­காக மிக முக்­கி­ய­மாக விளங்­கும் மாநி­லங்­களை அதி­பர் டிரம்ப் ஆத­ர­வுக்­காக முற்­று­கை­யிட்டு வரு­கி­றார். முன்­ன­தாக சுமார் 3,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் ஹில்­லரி கிளிண்­ட­னி­டம் நியூ ஹேம்­ஷி­யரை இழந்­தார் திரு டிரம்ப்.

இந்­நி­லை­யில், மக்­க­ளின் மனதை மாற்ற நேர­மும் வாய்ப்­பு­களும் திரு டிரம்­புக்­குச் சாத­க­மாக இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. தேர்­த­லில் அதிக வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை கார­ண­மா­கத் தொடங்­கப்­பட்ட முன்­வாக்­க­ளிப்பு முறை­யால் 56.5 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட அமெ­ரிக்­கர்­கள் நேர­டி­யாக அல்­லது அஞ்­சல் வழி­யாக தங்­கள் வாக்கை செலுத்­தி­விட்­டனர்.

திரு டிரம்­பும் அதே­போல் தம் இருப்­பி­ட­மான ஃபுளோரி­டா­வில் நேற்று முன்­தி­னம் வாக்­க­ளித்­து­விட்டு நார்த் கரோ­லினா, ஓஹாயோ, விஸ்­கோன்­சின் ஆகிய மாநி­லங்­களில் பிர­சா­ரம் நடத்த விரைந்­தார்.கொரோனா கொள்­ளை­நோய் கூடிய விரை­வில் ஒரு முடி­வுக்கு வரு­வ­தாக உறு­தி­ய­ளித்த திரு டிரம்ப், திரு பைடன் கூடு­தல் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை விதித்து பல­ரது வேலை­க­ளுக்கு மிரட்­டல் அளிப்­பார் என்று எச்­ச­ரித்­தார்.

‘நண்­பர்­க­ளைப் பற்றி இப்­ப­டியா பேசு­வது’

இந்­தி­யா­வைப் பற்றி இறுதி விவா­தத்­தில் பேசிய அதி­பர் டிரம்ப், “காற்று மாசு­பட்ட இந்­தியா” என்று குறிப்­பிட்­ட­தன் தொடர்­பில் நேற்று முன்­தி­னம் திரு பைடன் டுவிட் செய்­தி­ருந்­தார்.

“அதி­பர் டிரம்ப் இந்­தியா அசுத்­த­மா­னது என்­றார். நண்­பர்­க­ளைப் பற்றி பேசும் முறை இது­வல்ல. பரு­வ­நிலை மாற்­றம் போன்ற உல­க­ளா­விய பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க இது வழி­யும் அல்ல,” என்று அதில் பதி­விட்­டி­ருந்­தார்.

தம்­மு­டன் தேர்­த­லில் நிற்­கும் கமலா ஹாரிஸ், இந்­திய வம்சா வளி­யி­னர் என்று குறிப்­பிட்ட திரு பைடன், அவர்­க­ளுக்­கி­டையே உள்ள பங்­கா­ளித்­து­வத்­தைத் தாங்­கள் இரு­வ­ரும் பெரி­தும் மதிப்­ப­தா­க­வும் மீண்­டும் வெளி­நாட்­டுக் கொள்­கை­யின் மதிப்பை முன்­நி­றுத்­து­வர் என்­றும் கூறி­னார்.

இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் தேசிய பாது­காப்பு உத்­திக்கு முக்­கி­ய­மா­கக் கருதி இந்­தி­யாவை அணுகி வரும் அதி­பர் டிரம்­பி­ட­மிருந்து இந்த வார்த்­தை­கள் வந்­தது விசித்­தி­ர­மாக உள்­ள­தென காங்­கி­ரஸ் உத­வி­யா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

மேலும், அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ மற்­றும் தற்­காப்பு அமைச்­சர் மார்க் எஸ்­பர் இவ்­வா­ரம் இந்­தி­யா­வுக்­குச் சென்று அந்­நாட்டு அமைச்­சர்­க­ளு­டன் சந்­திப்பு நிகழ்த்­த­வுள்­ள­னர். இவ்­வே­ளை­யில் திரு டிரம்ப்­பின் பேச்சு பொருந்­தாத ஒன்­றாக உள்­ள­தெ­னக் கூறப்­பட்­டது.

திரு டிரம்ப்­பின் விவா­தப் பேச்­சுக்­குப் பிறகு, இந்­திய அமெ­ரிக்­கர்­கள் கொதித்­தெ­ழுந்­த­னர். வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெ­றும் இந்­திய அமெ­ரிக்­கர்­கள் சுமார் 1.9 மில்­லி­யன் உள்­ள­னர். இந்­நி­லை­யில் அவர்­க­ளுக்கு இடையே நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பில் 72 விழுக்­காட்­டி­னர் திரு பைட­னுக்கு வாக்­களிக்க ஆத­ரவு தெரி­வித்­த­தாக முடி­வு­கள் கூறின.

தேர்­தல் பிர­சா­ர­மும் கொள்ளை நோயும் மோதும் நிலை

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வின் கொவிட்-19 சம்­ப­வங்­களும் கட்டுக்­கடங்­கா­மல் அதி­க­ரித்­துக்­கொண்டே போகின்­றன.

தேர்­த­லும் கொள்­ளை­நோய் சூழ­லும் ஒரே நேரத்­தில் அமைந்­து­விட்ட நிலை­யில் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று என்­றும் இல்­லாத அள­வில் புதி­தாக 83,757 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

அதி­பர் டிரம்ப் தம் பேர­ணி­களை முக்­கிய மாநி­லங்­களில் அதி­க­ரித்­துள்ள நிலை­யில் அதிக எண்­ணிக்­கை­யில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் உறு­தி­யாகி வரு­கின்­றன.

ஃபுளோரி­டா­வில் பெருங்­கூட்­ட­மாக வந்த இவ­ரது ஆத­ர­வா­ளர்­களில் பலர் முகக் கவ­சம் அணி­யா­மல் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. டிரம்ப் ஆத­ர­வா­ளர்­கள் கொள்ளை நோயைக் காட்­டி­லும் பொரு­ளி­யல் மீதே அதிக அக்­கறை கொண்­டுள்­ள­தாக கருத்­துக்­க­ணிப்­பு­கள் கூறு­கின்­றன.

இது­வரை குறைந்­தது 8.8 மில்­லி­யன் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களும் 230,085 கொரோனா உயி­ரி­ழப்­பு­களும் அமெ­ரிக்­கா­வில் பதி­வா­கி­விட்­டன.

(படம்: ஏஎ­ஃப்பி)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!