வீடு வீடாக சென்று 80,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தும் பிரிட்டன்

வீடு வீடாக சென்று 80,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தும் பிரிட்டன்

1 mins read
92a6224e-2f33-4234-9df2-86299bf785e4
மருத்துவப் பரிசோதனைக் கான சாதனங்களைக் கொண்ட பெட்டிகளை வேனில் ஏற்றும் பிரிட்டிஷ் சுகாதாரத் துறை அதிகாரிகள். உருமாறிய கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது.படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: வீடு வீடாக சென்று கிட்­டத்­தட்ட 80,000 பேருக்கு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தும் பணியை பிரிட்­டன் நேற்று தொடங்­கி­யது. தென்­னாப்­பி­ரிக்க வகை கொவிட்-19 என்று அழை­க்­கப்­படும் உரு­மா­றிய கிருமி பரவு­வ­தைத் தடுக்க இந்த முயற்­சி­யில் பிரிட்­டன் இறங்­கி­யுள்­ளது.

இந்த வகை கிரு­மித்­தொற்று கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 22ஆம் தேதியன்று முதன்­மு­த­லாக பிரிட்­ட­னில் தலை­தூக்­கி­யது. இது­வரை மொத்­தம் 105 பேர் அந்­தக் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பிரிட்­ட­னில் உள்ள எட்டு வட்­டா­ரங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும். ஒவ்­வொரு வட்­டா­ரத்­தி­லும் ஏறத்­தாழ 10,000 பேர் வசிக்­கின்­ற­னர். இந்த வட்­டா­ரங்­கள் தலை­ந­கர் லண்­டன், தென்­கி­ழக்கு இங்­கி­லாந்து, மத்­திய இங்­கி­லாந்து, கிழக்கு இங்­கி­லாந்து, வட­மேற்கு இங்­கி­லாந்­தில் உள்­ளன.

பாதிக்­கப்­பட்ட வட்­டா­ரங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்­கும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும். அவர்­க­ளி­டம் கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இல்­லா­விட்­டா­லும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும். சமூக அள­வில் பாதிப்­பைத் தடுக்க இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. "நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. மிகவும் ஆபத்துமிக்க கட்டத்தில் உள்ளோம். உருமாறிய கிருமிகளும் பரவி வருகின்றன," என்று ஸ்காய் செய்தி நிறுவனத்திடம் பிரட்டிஷ் கல்வித் துணை அமைச்சர் மிஷெல் டோனெலன் தெரிவித்தார்.