உருமாறிய கிருமியால் தடுமாறும் நாடுகள்

மணிலா: ஆசிய நாடு­கள் சில­வற்­றில் மீண்­டும் கொரோனா அலை வீசத் தொடங்­கி­யுள்­ளது.

உல­கில் பல நாடு­க­ளி­லும் கொரோனா தடுப்­பூசி நட­வடிக்கை இடம்­பெற்று வரும் நிலை­யில், இந்­தியா, பிலிப்­பீன்ஸ் போன்ற ஆசிய நாடு­களில் நாளுக்கு நாள் கிருமித் தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. இதை­ அ­டுத்து, கிருமிப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த ஊர­டங்கு, கடும் கட்­டுப்­பா­டு­கள் போன்ற நட­வடிக்­கை­களை அந்­நா­டு­கள் எடுக்க வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்டுள்­ளன.

இந்­தி­யா­வில் கடந்த நான்கு நாள்­க­ளாக ஒரு­நாள் பாதிப்பு நூறா­யி­ரத்­திற்கு மேல் பதி­வா­கி­யுள்­ளது. குறிப்­பாக, மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் நாளொன்­றுக்கு 50,000க்கு மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். அதி­கம் பர­வக்­கூ­டிய, புதிய உரு­மா­றிய கிரு­மியே இதற்­குக் கார­ணம் என்று இந்­திய பொதுச் சுகா­தார அற­நி­று­வ­னத்­தின் நோய்த்­தொற்­றி­யல் பேரா­சி­ரி­யர் டாக்­டர் கிரி­தர பாபு கூறினார்.

"இப்­போ­தைக்கு கொரோனா தொற்று உச்­சத்தை எட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. இம்­மாத இறுதி அல்­லது மே தொடக்­கம்­வரை கொரோனா தொற்று ஏறு­மு­கத்­தில் இருக்­கும்," என்­றார் அவர்.

இரட்டை உரு­மாற்­றக் கிருமி குறித்து இந்­திய சுகா­தார அமைச்சு கடந்த மாதம் அறி­வித்­தது. அந்­தப் புதிய திரிபு, மற்­ற­வற்­றை­விட வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யதா என்­பது தெரி­ய­வில்லை.

பிலிப்­பீன்­சில் மார்ச் மாத நடுப்­பகு­தி­யில் கொரோனா பாதிப்­பால் மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழிந்­ததை அடுத்து, தலை­ந­கர் மணி­லா­வி­லும் அதைச் சுற்­றிய பகு­தி­களி­லும் இன்­று­வரை ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அங்­கும் சென்ற மாதத்­தில் புதிய உரு­மா­றிய கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அந்­நாட்­டில் புதிய உச்­ச­மாக நேற்று முன்­தி­னம் 401 பேர் கிரு­மித்­தொற்­றால் உயிரிழந்தனர்.

அதே­போல, தென்­கொ­ரி­யா­விலும் கொரோனா 4வது அலை வீசத் தொடங்­கி­விட்­டதாக அச்­சம் நில­வு­கிறது. கடந்த வியா­ழ­னன்று அங்கு புதி­தாக 700 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

தாய்­லாந்­தில் இவ்­வா­ரம் புத்­தாண்டு கொண்­டாட்­டங்­கள் தொடங்­க­வி­ருக்­கும் நிலை­யில் அங்­கும் கொரோனா அலை மீண்­டும் வீசுவதால் கட்­டுப்­பாடுகள் கடு­மை­யாக்­கப்­பட்­டு உள்­ளன.

'தட்டுப்பாட்டால் கட்டுப்பாடு'

இத­னி­டையே, தடுப்­பூசி தட்­டுப்­பாட்­டா­லும் பக்­க­வி­ளை­வு­கள் கார­ண­மாக ஒரு சில நிறு­வனங்­க­ளின் தடுப்­பூ­சி­க­ளைப் போடு­வது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­லும் கொலம்­பியா, அர்­ஜெண்­டினா, பிரே­சில் உள்­ளிட்ட தென்­ன­மெ­ரிக்க நாடு­களி­லும் பிரான்ஸ், ஜெர்­மனி, ஸ்லோ­வே­னியா போன்ற ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!