மலேசியாவில் US$1 பி. மைக்ரோசாஃப்ட் முதலீடு

மலேசியாவில் US$1 பி. மைக்ரோசாஃப்ட் முதலீடு

1 mins read
076a58f1-994a-455d-b8ce-c38f8fa18342
-

கோலா­லம்­பூர்: அமெ­ரிக்­கா­வின் மைக்­ரோ­சா­ஃப்ட் கார்ப்­ப­ரே­ஷன், மலே­சி­யா­வில் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் US$1 பில்­லி­யன் (S$1.3 பில்­லி­யன்) முத­லிடும்.

அர­சாங்க அமைப்­பு­க­ளோ­டும் உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளோ­டும் கூடிய புதிய பங்­கா­ளித்­துவ செயல்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக அந்த முத­லீடு இடம்­பெ­றும் என்று மலே­சி­யா­வின் பிர­த­மர் முகை­தீன் யாசின் அறி­வித்­தார்.

அவர் நேற்று அந்­தச் செயல்­திட்­டத்தை தொடங்கி வைத்­தார்.

புதிய முத­லீ­டு­கள் மூலம் மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னம் தனது முத­லா­வது வட்­டார கணி­னித் தக­வல் மையத்தை நிறுவும் என்­றும் அது பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த கணி­னித் தக­வல்­களை நிர்­வ­கிக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.