தென்கொரியாவில் ஆக அதிக கிருமித்தொற்று

சோல்: தென்­கொ­ரி­யா­வில் டெல்டா வகை கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் போராடி வரும் நிலை­யில், நேற்று அங்கு அன்­றாட கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் பதி­வா­யின.

அங்கு முடக்­க­நிலை இல்லை என்­றா­லும் தீவிர பரி­சோ­தனை மற்­றும் தொடர்பு தட­ம­றி­தல் ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக நாடு தழு­விய அள­வில் கிரு­மிப் பர­வல் விகி­தம் ஓர­ள­வுக்குக் குறை­வா­கவே உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த வாரம் 2,381 கிரு­மித்­தொற்று மாதி­ரி­க­ளைக் கொண்டு நடத்­தப்­பட்ட மர­பணு பகுப்­பாய்­வில் கிட்­டத்­தட்ட 40 விழுக்­காடு டெல்டா வகை தொற்று என்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக கொரியா நோய் கட்­டுப்­பாடு, தடுப்பு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

டிசம்­பர் மாதம் முதல் அங்கு 1,741 டெல்டா வகை தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­னது. அவற்­றில் பாதிக்­கும் மேற்­பட்­டவை கடந்த வாரம் கண்­ட­றி­யப்­பட்­ட­வை­யா­கும்.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருந்­தா­லும் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்கப்

­ப­டு­வோர் எண்­ணிக்­கையோ அல்­லது உயி­ரி­ழப்போ குறிப்­பி­டத்­தக்க அளவில் அதி­க­ரிக்­க­வில்லை. இறப்பு விகி­தம் 1.13 விழுக்­கா­டா­க­வும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 214ஆக­வும் உள்­ளது.

தென்­கொ­ரி­யா­வின் 52 மில்­லி­யன் மக்­களில், 32 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு முறை­யா­வது தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

செப்­டம்­பர் மாதத்­திற்­குள் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போட அந்­நாட்டு அர­சாங்­கம் இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!