கந்தஹாரை நெருங்கும் தலிபான்; பீதியில் தப்பி ஓட முயலும் ஆப்கான் மக்கள்

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னின்

கந்த­ஹார் நகரை தலி­பான் போராளிகள் நெருங்­கு­வ­தாக

செய்­தி­கள் வெளி­யாகி உள்­ளன.

இத­னால் அங்கு வாழும்

மக்­கள் பீதி­ய­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் அங்­கி­ருந்து தப்பி ஓட முயற்சி செய்து வரு­வ­தா­க­வும் ஆப்­கான் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தலி­பா­னின் முன்­னாள்

கோட்­டை­யாக கந்தஹார் விளங் கியது என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

அண்­மை­யில் அமெ­ரிக்­கப் படையை ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து வெளி­யேற்ற அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் முடி­வெ­டுத்­தார்.

அதை­ய­டுத்து, அமெ­ரிக்­கப் படை­கள் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து வெளி­யேறி வரு­கின்­ற­ன.

இது­தான் சம­யம் என்று இவ்­

வ­ளவு கால­மா­கக் காத்­துக்­கொண்­டி­ருந்த தலி­பான் போரா­ளி­கள், ஆப்­கா­னிஸ்­தா­னைத் தங்­கள்

கட்­டுப்­பாட்­டின்­கீழ் கொண்டுவர முழு­வீச்­சு­டன் சண்­டை­யிட்டு வரு­கின்­ற­னர்.

தலி­பா­னைச் சமா­ளிக்க முடி­யா­மல் ஆப்­கான் ராணுவ வீரர்­கள் பலர் தப்பி ஓடு­கின்­ற­னர்.

சில இடங்­களில் தலி­பா­னுக்­கும் ஆப்­கான் ராணுவ வீரர்­க­ளுக்­கும் இடையே கடு­மை­யான போர் நடை­பெற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், ஆப்­கா­னிஸ்­தா­னின் பெரும்­பா­லான பகு­தி­களை தலி­பான் கைப்­பற்­றி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முக்­கிய எல்­லைப் பகு­தி­களை தலி­பான் தனது கட்­டுக்­குள் கொண்டு வந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், தலி­பான் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால் தங்­கள் வாழ்க்கை சீர­ழிந்­து­வி­டும் என ஆப்­கா­னி­யர்­கள் பலர் அஞ்­சு­கின்­ற­னர்.

நாட்­டை­விட்டு வெளி­யேற பலர் முயன்று வரு­கின்­ற­னர்.

“சண்­டை­யால் 22,000 குடும்­பங்­கள் வசிப்­பி­டத்தை இழந்­து­விட்­டன. பாதிக்­கப்­பட்ட வட்­டா­ரங்­

க­ளி­லி­ருந்து பாது­காப்­பான இடங்­

க­ளுக்­கு அவர்கள் அனைவரும் தப்பி ஓடி­விட்­ட­னர்,” என்று ஆப்­கான் அக­தி­கள் துறைத் தலை­வர்­திரு டோஸ்ட் முகம்­மது டர்­யப் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!