நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் அதிக தடுப்பூசிகளை வாங்கின

ஆக்­லாந்து: நியூ­சி­லாந்­தில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும்­வே­ளை­யில், டென்­மார்க்­கில் இருந்து 500,000 தடுப்­பூ­சி­களை வாங்­கி­யுள்­ள­தாக அதன் பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டென் கூறி­யுள்­

ளார்.

போது­மான தடுப்­பூசிகள் கையி­ருப்பு உள்­ள­தா­கக் கூறிய பிர­த­மர் ஜெசிந்தா, நாட்டு மக்­கள் அனை­

வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வலி­யு­றுத்­தி­னார்.

ஆக்­லாந்­தில் நேற்று 20 உள்­ளூர் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தாக கூறிய நியூ­சி­லாந்து,

நீண்ட நாட்­க­ளுக்­குப் பிறகு சென்ற மாத இறு­தி­யில் முதல் தொற்று சம்­ப­வம் கண்­ட­றி­யப்­பட்ட பிறகு, இதுவரை 599 பேர் தொற்­றுக்கு ஆளா­கியுள்ளனர்.

அது­போல் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­டம் இருந்து கூடு­த­லாக 1 மில்­லி­யன் மொடர்னா தடுப்­பூ­சி­களை வாங்­கி­யி­ருப்­ப­தாக அதன் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் சொன்­னார்.

இவ்­வார பிற்­ப­கு­தி­யில் ஒரு மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் வந்­து ­சே­ரும் என்­றும் 25 மில்­லி­யன் மொடர்னா தடுப்­பூ­சி­களை வாங்­க­வுள்­ள­தா­கவும் மோரி­சன் சொன்­னார்.

சிட்­னி­யும் மெல்­பர்­னும் நீண்ட நாட்­க­ளாக முடக்­க­நி­லை­யில் உள்­ள­தால், ஆஸ்­தி­ரே­லிய பொரு­ளா­தா­ரம் தொடர்ந்து 2வது ஆண்­டாக மந்­த­நி­லைக்குச் செல்­லக்­கூ­டும் என்ற அபா­யத்­திற்கு மத்­தி­யில், தடுப்­பூசி வாங்­கப்­பட்­டுள்­ளது அதன் பொரு­ளா­தா­ரத்தை ஊக்­கு­விக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஏனெ­னில் 70 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூ­சி போட்­டுக்­கொள்­ளும் வரை அங்கு முடக்­க­நிலை நடப்­பில் இருக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!