ஓமிக்ரான் ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மலேசியா தடை

கோலா­லம்­பூர்: ஓமிக்­ரான் தொற்­றுள்ள அல்­லது கிரு­மித்­தொற்று ஆபத்து அதி­க­முள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு மலே­சியா தற்­கா­லிகத் தடை விதித்­தது.

சுகா­தார அமைச்­சர் இது பற்­றிய விவ­ரங் களை நேற்று வெளி­யிட்­டார்.

தென் ஆப்­பி­ரிக்க நாடு­களில் அதி­வே­கத்­தில் பர­வக்­கூ­டிய புதிய உரு­மா­றிய ஓமிக்­ரான் கிருமி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து குறிப்­பிட்ட ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்கு பல நாடு­கள் தடை விதித்து வரு­கின்­றன. அந்த வரி­சை­யில் மலே­சி­யா­வும் தற்­போது சேர்ந்­துள்­ளது.

தென்­னாப்­பி­ரிக்கா, ஸிம்­பாப்வே, மொஸாம்­பிக் உட்­பட எட்டு ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்கு தடை பொருந்­தும். புதிய கிருமி மற்ற நாடு­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால் தடை விரிவு படுத்­தப்­படும் என்­று மலேசியா கூறி­யுள்­ளது.

ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளுக்கு 'விடி­எல்' எனப்­படும் சிறப்பு பயண ஏற்­பா­டு­கள் செய்­வ­தை­யும் மலே­சியா ஒத்திவைத்­துள்­ளது. அது­மட்­டு­மல்­லா­மல் தடுப்­பூசி போட்­டி­ருந்தாலும் ஆப்­பி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து திரும்­பும் மலே­சியர்­கள் மற்­றும் நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­ப­வர்­கள் தனி­மைப்­ப­டுத்தப்படுவார்கள்.

"ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மிப் பற்றி அதிக விவ­ரங்­கள் தெரி­யும் வரை இந்­தத் தடை­கள் தற்­கா­லி­க­மாக அம­லில் இருக்­கும்," என்று சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­தார். மலே­சியா தனது எல்­லை­களை படிப்­ப­டி­யாகத் திறந்­து­வ­ரும் வேளை­யில் புதிய கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. மலே­சி­யா­வில் இது­வரை ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வங்­கள் எதுவும் பதி­வா­க­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!