குவாண்டாஸ் விமானிகளில் சிலர் தவறு செய்வதாக ஊடகங்கள் தகவல்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவாண்­டாஸ் விமான நிறு­வ­னத்­தின் சில விமா­னி­கள் பணி­யில் தவறு செய்­வ­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

அந்­நி­று­வ­னம் அண்­மை­யில் குறிப்பு ஒன்றை அலு­வ­லகத்­திற்குள் அனுப்­பியது.

அந்­தக் குறிப்­பில் சில விமா­னி­கள் செய்­யும் தவ­று­கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தாக ஆஸ்­தி­ரே­லிய ஊட­கங்­க­ளான சிட்னி மார்­னிங் ஹெரால்ட், மெல்­பர்ன்ஸ் ஏஜ் ஆகி­யவை தெரி­வித்­தன.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு பணிக்­குத் திரும்­பி­யுள்ள குவான்­டா­ஸின் அனைத்து விமானி­களும் வழக்க நிலைக்­குத் திரும்­ப­வில்லை. இன்னமும் சில விமா­னி­கள் தவறு செய்­வ­தா­கக் கூறப்­ப­டு­ கிறது.

பிரேக்கை விலக்காமல் விமா­னத்­தைக் கிளப்­பு­வது, விமா­னம் பறக்­கும் உய­ரத்தை வேகம் என்று தவ­றாக எடுத்­துக் கொள்­வது போன்ற தவறு ­கள் அந்­தக் குறிப்­பில் பட்­டி­ய­லி­டப் ­பட்­டுள்­ளன.

விமானி அறை­யில் உள்ள விசைகள் தவ­றான நிலை­யில் இருப்­ப­தா­க­வும் விமா­னி­கள் சூழ்­நி­லைக்­குத் தேவை­யான விழிப்­பு­ணர்வை இழந்­து­விட்­டதை உண­ர­வில்லை என்­றும் குறிப்பு தெரிவிக்­கிறது.

தொற்று கார­ண­மாக விமா­னங்­கள் பறக்­கா­த­தால் விமா­னி­க­ளுக்கு அனு­ப­வக்குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக அந்தக் குறிப்பை அனுப்பிய குவாண்­டா­சின் விமான செயல்­பாட்டு அதி­காரி தெரிவித்து உள்ளார்.

"உல­கெங்­கும் உள்ள விமான நிறு­வ­னங்­கள் கொவிட்-19 தொற்­றுக்கு முந்­தைய நிலையை அடை வதற்கு சிக்­க­லான நடை­மு­றை­களை எடுத்து வரு­கின்­றன.

அவற்­றில் விமா­னி­களை வழக்­க­நி­லைக்­குக் கொண்டு வரு­வ­தும் அடங்­கும் என்று குவாண்­டாஸ் செய்­தித் தொடர்­பா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

"விமா­னத் துறை எதிர்­பா­ராத சவால்­களை எதிர்­நோக்­கும் வேளை­யில் இயல்பு நிலைக்­குத் திரும்­பு­வ­தற்­கான திட்­டங்­கள் வகுக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்புக்குத்தான் நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். எங்­க­ளு­டைய விமா­னி­கள் பாது­காப்­புக்­குத் தேவை­யான திறன்­ களு­ட­னும் நம்­பிக்­கை­யு­ட­னும் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்," என்று அந்­தப் பேச்­சா­ளர் மேலும் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!