தைப்பூசம்: பத்துமலையில் பக்தர்கள் காணிக்கை

கோலா­லம்­பூர்: தைப்­பூ­சத் திரு­விழாவை முன்­னிட்டு மலே­சி­யா­வின் பத்­து­மலை முரு­கன் கோயி­லில் பக்­தர்­கள் கடந்த வார­யி­றுதி முதல் முரு­க­னுக்குப் பால் குடக் காணிக்­கை­யைச் செலுத்தி வரு­கின்­ற­னர்.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக பத்து­ம­லை­யில் தைப்­பூ­சத் திரு­வி­ழா­வுக்­குச் சிறப்புச் சேர்க்­கும் காவடி ஊர்­வ­லத்­துக்கு இந்த ஆண்டு அனு­மதி இல்லை.

அத்­து­டன் இவ்­வாண்டு குறை­வான பக்­தர்­க­ளுக்கே அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வ­லுக்கு அஞ்சி பலர் பத்­து­ம­லைக்கு வர­வில்லை என்று பக்­தர்­கள் சிலர் கூறி­னர்.

பல்­லா­யி­ரம் பேர் வந்த இடத்­தில் பல­நூறு பேர்­தான் வரு­வ­தைப் பார்த்­த­போது வருத்­தம் அடைந்­த­தாக கிருஷ்­ணன் கருப்­பன் எனும் பக்தர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில் நேற்று அதி­காலை பினாங்­கில் தங்கம், வெள்ளி ஆகிய இரட்­டைத் தேர் ஊர்­வ­லம் நடை­பெற்­றது.

கடந்த ஆண்டு தேர் ஊர்­வலம் நடை­பெ­றாத நிலை­யில், மழைத் தூறிக் கொண்டிருந்தபோதும் தேர்­க­ளைப் பார்க்க பல­நூறு பேர் வீதி­களில் குழு­மி­யி­ருந்­த­தாக 'தி ஸ்டார்' ஊடகச் செய்தி கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!