கொவிட்-19 முடிவுக்கு வரவில்லை: ஐநா எச்சரிக்கை

கொவிட்-19 முடிவுக்கு வரவில்லை: ஐநா எச்சரிக்கை

2 mins read
33be7d99-36f6-4122-b995-3a3aabbb946c
-

நியூ­யார்க்: கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடங்கி ஈராண்டு ஆகி­விட்ட நிலை­யில், அது இன்­னும் முடி­வுக்கு வர­வில்லை என்­றும் தடுப்­பூசி விநி­யோ­கம் சம­மற்­ற­தாக உள்­ள­தால் அது மேலும் நீடிக்­கக்­கூ­டும் என்று ஐநா எச்­ச­ரித்­துள்­ளது.

"உல­கம் முழு­வ­தும் 446 மில்­லி­யன் பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். இத­னால் மாண்­டோர் எண்­ணிக்கை ஆறு மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­டது. மேலும் பல­ரின் மன­ந­லம் மோச­ம­டைந்து வரு­கிறது," என்­றார் ஐநா தலை­வர் அன்­டோ­னியோ குட்­ரேஸ்.

"அதே சம­யம், இது­வ­ரை­யில்­லாத அள­வுக்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட பொதுச் சுகா­தார நட­வ­டிக்­கை­கள், துரி­த­மாக தயா­ரிக்­கப்­பட்டு மக்­க­ளுக்­குப் போடப்­பட்ட தடுப்­பூசி ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக, உலகின் பல நாடு­கள் கொள்­ளை­நோயைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ளன.

ஆனால், கொள்­ளை­நோய் முடிவுக்கு வந்­து­விட்­ட­தாக கரு­து­வது பெரும் தவறு," என்­றும் அவர் சொன்­னார்.

ஒவ்­வொரு மாத­மும் 1.5 பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்­றா­லும் கிட்­டத்­தட்ட மூன்று பில்­லி­யன் பேர் இன்­ன­மும் முதல் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தற்­காக காத்­து­ கி­டப்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

"இது, ஏழை நாடு­களில் உள்ள மக்­க­ளின் ஆரோக்­கி­யத்­தை­விட பணக்­கார நாடு­களில் உள்ள மக்­க­ளின் ஆரோக்­கி­யத்­திற்கு முன்­னு­ரிமை அளிக்­கும் கொள்கை முடி­வு­க­ளின் நேரடி விளைவு," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, உல­கச் சுகா­தார நிறு­வ­னம், கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தற்­கு தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்­ளது. அதே சம­யம் பின்­தங்­கிய நாடுகளில் உள்­ள­வர்­க­ளுக்கு முதல் தடுப்­பூசி போடு­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அது சொன்­னது.

பலர் முதல் தடுப்பூசியே போட்டுக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், கூடுதல் தடுப்பூசி போடுவதற்கு நிறுவனம் சென்ற ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது. ஓமிக்ரான் பரவல் நோயெதிர்ப்புத் திறனை குறைத்துவிடுவதாக கூறப் படுவதற்கு இடையில், நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.