இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், ஹாங்காங்கில் நிலநடுக்கம்

இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், ஹாங்காங்கில் நிலநடுக்கம்

1 mins read
e257a73e-e8bf-4686-a4f0-355c82e5492e
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் சக்தி வாய்ந்த நில­ந­டுக்­கம் தாக்­கி­ய­தில் கட்­ட­டங்­கள் குலுங்­கின. சுமத்ரா தீவில் இருந்து 168 கிலோ மீட்­டர் தொலை­வில் நில அதிர்வு உண­ரப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ரிக்­டர் அளவு கோலில் 6.7 ஆக நில­ந­டுக்­கம் பதி­வா­ன­தாக அமெ­ரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரி­வித்­துள்­ளது.

நிலநடுக்­கத்­தால் பெரி­ய­ள­வில் பொருள்­சே­தமோ, உயிர் சேதமோ ஏற்­ப­ட­வில்லை என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மேலும் நிலநடுக்­கப் பகு­தி­யில் குடி­யி­ருந்த மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­டை­நா­டான பிலிப்­பீன்­சை­யும் நிலநடுக்­கம் தாக்­கி­ய­தால், குடி­யி­ருப்­பு­களை விட்டு மக்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

லஸ்­சன் தீவில் உள்ள மோராங்­கில் உள்­ளூர் நேரப்­படி அதி­காலை நில அதிர்வு உண­ரப்­பட்­ட­தா­க­வும் ரிக்­டர் அளவு கோலில் 6.4ஆக பதி­வா­ன­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஹாங்­காங்­கி­லும் நில­ந­டுக்­கத்தை உணர்ந்­த­தாக அந்­ந­கர மக்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.