ஜோகூர்­வா­சி­களை ஈர்க்­கும் சிங்­கப்­பூர் வெள்ளி

கோலா­லம்­பூர்: சிங்­கப்­பூர்-மலே­சியா தரை­வழி எல்­லை­கள் ஏப்­ரல் முதல் தேதி மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து, ஜோகூர் பாரு­வில் வியா­பா­ரம் சூடு­பி­டித்­துள்­ளது. இருந்­தா­லும், ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் அங்­குள்ள பல வர்த்­த­கங்­கள் சிர­மப்­பட்டு வரு­கின்­றன.

மலே­சிய ரிங்­கிட்­டுக்கு எதி­ரான சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு தற்­போது வலு­வாக இருப்­ப­தால், ஜோகூர்­வா­சி­கள் பலர் சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்க ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.

சென்ற மாதம் 25ஆம் தேதி மலே­சிய ரிங்­கிட்­டுக்கு எதி­ரான சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு உயர்ந்­தது. அன்று ஒரு வெள்­ளிக்கு எதி­ரான ரிங்­கிட்­டின் மதிப்பு 3.1665ஐ எட்­டி­யது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அதன் நாண­யக் கொள்­கை­யைக் கடு­மை­யாக்­கி­ய­தும் அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான ரிங்­கிட்­டின் மதிப்பு சரிந்­த­தும் அதற்­குக் கார­ணம்.

"கொவிட்-19 பெருந்­தொற்­றுக்கு முன்பு சிங்­கப்­பூ­ரில் வேலை செய்து வந்த மலே­சி­யர்­களில் 80 விழுக்­காட்­டி­னர், எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்ட பிறகு, சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரிய விரும்­பு­கின்­ற­னர். சிங்­கப்­பூர் வெள்­ளிக்­கும் ரிங்­கிட்­டுக்­கும் இடை­யி­லான நாணய மாற்று விகி­தமே இதற்கு முக்­கிய கார­ணம். இத­னால், உள்­ளூர் வர்த்­த­கங்­க­ளுக்கு ஆள்­பற்­றாக்­குறை ஏற்­ப­டு­கிறது," என்று மலே­சிய வர­வு­செ­லவு, வர்த்­தக ஹோட்­டல் சங்­கத்­தின் துணைத் தலை­வர் ஸ்ரீ கணேஷ் மைக்­கல் கூறி­னார்.

"ஹோட்­டல் துறை­யில் இயங்­கும் வர்த்­த­கங்­கள் தாக்­குப்­பி­டிக்க தீர்­வு­க­ளைத் தேட­வேண்­டும். இல்­லா­வி­டில், வர்த்­த­கத்தை அவை இழுத்து மூட நேரி­டும். மலே­சிய அர­சாங்­கம் இதில் தலை­யிட்டு உதவ வேண்­டும்," என்­றும் அவர் சொன்­னார்.

ஜன­நா­யக செயல் கட்­சி­யைச் சேர்ந்த ஜோகூர் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான லியூ சின் டோங், மலே­சிய ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் பெறக்­கூ­டிய சம்­ப­ளத்­தில் குறைந்­தது மூன்­றில் இரண்டு பங்கை வழங்­கு­மாறு மாநில அர­சாங்­கத்­தி­ட­மும் முத­லா­ளி­க­ளி­ட­மும் வலி­யு­றுத்­தி­னார்.

"எடுத்­துக்­காட்­டாக, சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சிய ஊழி­யர் ஒரு­வ­ருக்கு மாதச் சம்­ப­ள­மாக 2,000 வெள்ளி வழங்­கப்­பட்­டி­ருந்­தால், 3,000 முதல் 4,000 ரிங்­கிட் வரை சம்­ப­ளம் வழங்­கி­னால் அவர் மலே­சி­யா­வில் வேலை செய்ய விரும்­பு­வார்," என்று திரு லியூ விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!