நியூயார்க்கில் துப்பாக்கிச் ‌சூடு; 10 பேரைக் கொன்றவன் கைது

நியூயார்க்: அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் 18 வயது இளை­ஞன் ஒரு­வன் 10 பேரைச் சுட்­டுக்­கொன்று விட்டதாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வத்தை 'இன­வெ­றிக் குற்­றம்' என்று வகைப்­ப­டுத்தி விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தாக செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கூறப்­பட்­டது.

துப்­பாக்கி ஏந்­திய இளை­ஞன் 'டாப்ஸ்' பேரங்­கா­டிக்கு வெளியே இருந்த வாகன நிறுத்­து­மி­டத்­தில் நால்­வ­ரைச் சுட்­ட­தா­க­வும் பின்­னர் பேரங்­கா­டிக்­குள் சென்று தாக்­கு­த­லைத் தொடர்ந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது. பேரங்­கா­டி­யில் சுடப்­பட்­ட­வர்­களில் ஓய்­வு­பெற்ற காவல் அதி­காரி ஒரு­வ­ரும் அடங்­கு­வார்.

மாண்­ட­வர் எண்­ணிக்கை 10 என்­றும் தாக்­கு­த­லில் மேலும் மூவர் காய­ம­டைந்­தி­ருந்­த­னர் என்­றும் கூறப்­பட்­டது. இவர்­களில் 11 பேர் ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­கள் ஆவார் கள்.

அந்த இளை­ஞன் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்தை நேர­லைக் காணொ­ளி­யாக 'டுவிட்ச்' சமூக இணை­யத்­த­ளம் வழி­யாக ஒளி­பரப்பியதாகவும் கூறப்­ப­டு­கிறது.

காவல் அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்தை அடைந்­த­போது, இளை­ஞன் தன் கழுத்­தில் துப்­பாக்­கியை வைத்­த­தா­க­வும் பின்­னர் காவ­லர்­களு­டன் பேசி­யதை அடுத்து சர­ண­டைந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

தாக்­கு­தலை நேர­லை­யாக ஒளி­பரப்பு செய்ய, தங்­க­ளின் 'டுவிட்ச்' சமூக இணை­யத்­த­ளம் பயன்­ப­டுத்­தப்­பட்­டதை அந்­நி­று­வ­னத்­தின் பேச்­சா­ளர் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

இருப்­பி­னும், வன்­முறை தொடங்கி இரண்டு நிமி­டங்­க­ளுக்­குள் அந்த நேரடி ஒளி­ப­ரப்­பைத் தாங்­கள் அகற்­றி­விட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அமெ­ரிக்­கா­வில் 2020ஆம் ஆண்­டில் துப்­பாக்­கிச் சூட்­டால் நேர்ந்த மர­ணங்­கள் 19,350 ஆகும். 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 35% அதி­க­ரிப்பாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!