டெக்சஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு: 40 நிமிடம் பள்ளியில் இருந்த கொலையாளி

உவால்டி: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 18 வயது இளையர் அப்பள்ளிக்குள் 40 நிமிடங்கள் முதல் 60 நிமிடம் வரை இருந்ததாகவும் அப்போது காவல்துறையினர் உள்ளே நுழையாமல் இருந்தனர் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடந்த சில நிமிடங் களில் அருகில் இருந்த பெண்கள் சிலர், உள்ளே சென்று துப்பாக்கிக் காரனைத் தடுக்கும்படி காவல்துறையினரிடம் கூச்சலிட்ட லிட்டனர். ஆனால் காவல்துறை யினர் உள்ளே செல்லவில்லை என்றார் சம்பவம் நடந்த ரோப் தொடக்கப்பள்ளி அருகே வசிக்கும் ஜுவான் கரான்ஸா, 24.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோர் ஒருவர் பொதுமக்களே உள்ளே சென்று தடுக்கலாம் என்றும் யோசனை கூறினார்.

சேவியர் கஸாரெஸ் என்ற அந்த நபரின் மகள் தாக்குதலில் மாண்டார். அவரது மகள் உட்பட 19 சிறுவர்களும் இரண்டு பெரியவர்களும் அந்தக் கோரத் தாக்குதலில் உயிர் இழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.

தாக்குதலை முறியடிக்க இன்னும் அதிகம் செய்திருக்கலாம், என்றார் திரு கஸாரெஸ்.

ஆனால் துப்பாக்கிக்காரன் தன்னை வகுப்பறைக்குள் அடைத்துக் கொண்டதாகவும் அதிகாரிகளால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் எல்லைக் காவல்துறை கூறியது.

கொலையாளி சால்வடோர் ரமோஸ் துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்னர் தாம் தாக்கப் போவதாக சமூக ஊடகத்தில் தகவல் அனுப்பினார் என்று டெக்சஸ் ஆளுநர் கிரெக் எபட் தெரிவித்தார்.

இணையம் வழியாக சந்தித்த ஜெர்மானியப் பெண்ணுக்கு சால்வடோர் தனிப்பட்ட தகவல்களை அனுப்பினார்.

தாக்குதலுக்கு அரை மணி நேரம் முதல் சற்று நேரம் முன்னர் வரை அவர் பலமுறை தகவல் அனுப்பினார் என்று திரு எபட் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!